கருணாநிதி வீட்டுக்கு எடப்பாடி செல்லாமல் ஓ.பி.எஸ் சென்றது எதற்கு? பரபரப்பு தகவல்!


துணை முதலமைச்சர் தலைமையில் மூத்த அமைச்சர்கள் கலைஞர் வீட்டுக்கு சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏன் அங்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

யாரும் எதிர்பாராத வகையில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் திடீரென கோபாலபுரம் சென்றனர். கருணாநிதி உடல் நிலை நலிவுற்றுள்ளதாக காவேரி மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்ட உடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுநாள் வரை கருணாநிதி நலமுடன் உள்ளார் என்றே செய்தி குறிப்புகள் வெளியாகின. தற்போது உடல் நிலை நலிவுற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், என்ன என்று நேரில் சென்று பார்த்து வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். உடனடியாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கருணாநிதியை சந்திக்க ஆயத்தமாகினர்.

இது குறித்த தகவல் உடனடியாக கோபாலபுரத்திற்கு சென்றுள்ளது. ஆனால் திடீரென முதலமைச்சர் வருகை தந்தால், கருணாநிதிக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்று தகவல் பரவி வீண் குழப்பம் ஏற்படும் என்று ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளார்.

அப்படி என்றால் துணை முதலமைச்சரான நான் மட்டுமாவது வருகிறேன் என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார். அதனை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். ஆனால் திடீரென ஓ.பி.எஸ் மட்டும் கோபாலபுரம் சென்றால் அது அரசியல் ரீதியாக வேறு ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்ற மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.


ஏற்கனவே நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் ஓ.பி.எஸ் பிரச்சனையில் உள்ளார். இந்த நிலையில் அவர் தி.மு.க தலைவரை சந்திக்க அவரது வீட்டுக்கே தனியாக செல்வது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்தே மூத்த அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ் கோபாலபுரம் சென்றுள்ளார். முதலில் ஓ.பி.எஸ் மட்டும் தான் வருவதாக ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள் கோபாலபுரம் வந்த பிறகே ஸ்டாலினுக்கு அவர்கள் வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே மறுநாளான காலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலைஞரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த முறை வளர்ச்சி திட்டத்தை துவங்கி வைக்க சேலம் செல்லும் முன்பு, உடல் நலிவுற்றவரை பார்க்க செல்ல வேண்டாம் என்று சிலர் எச்சரித்துள்ளனர். இதனால் தான் கோபாலபுரம் செல்வதை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு சென்றுள்ளார்.-Source: tamil/asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!