பல ஆண்டுகளாக முதுகுவலி… பெண்ணின் சிறுநீரகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி..!


தொடர் முதுகுவலி இருந்த பெண்ணொருவரை மருத்துவர்கள் சோதித்த போது, அவரது சிறுநீரகத்தில் சுமார் 3,000 கற்கள் இருந்தது தெரிய வந்தது.

சீனாவின் ஜியாங்ஸு மகாணத்தில் உள்ள ஜாங்ஸு பகுதியில் உஜின் என்ற மருத்துவமனையில், ஷாங்(56) எனும் பெண் தனக்கு தொடர் முதுகுவலி இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சில ஆண்டுகளாகவே இந்த முதுகுவலி இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவரது வலப்புற சிறுநீரகத்தை பரிசோதித்தபோது, அதில் ஏராளமான சிறுநீரக கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்கேன் செய்ததில் ஆயிரக்கணக்கான கற்கள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக ஷாங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கற்களை வெளியேற்றினர். அந்த கற்களை மருத்துவர்கள் ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு எண்ணியபோது, மொத்தமாக 2,980 சிறுநீரக கற்கள் இருப்பது தெரிய வந்தது. இவ்வளவு கற்களுடன் இந்த பெண் எப்படி சில வருடங்கள் இருந்தார் என்பது மருத்துவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பு இந்தியரான தன்ராஜ் என்பவரின் சிறுநீரகத்தில் இருந்து 1,72,155 கற்கள் அகற்றப்பட்டது. அது இதுவரை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!