ஆசிய கோப்பை 2018 – எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19ம் தேதி மோதுகின்றன..!!


இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளன.

முதல் போட்டி செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இலங்கையும் வங்காளதேசமும் மோதுகின்றன. இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் தேதி மோதுகிறது.

இரு பிரிவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றில் இருந்து இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இறுதி போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!