புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது இப்படியொரு பழியா?


பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது பெண் ஒருவர் செக்ஸ் புகார் அளித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் இவர் ‘ராம்போ’, ‘ராக்கி’, ‘தி கிலிப் கேங்கர்’ உள்ளிட்ட அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சாகச படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவர் மீது ஒரு பெண் செக்ஸ் புகார் கூறியுள்ளார். 1986-ம் ஆண்டு எனக்கு 16 வயது இருந்த போது சில்வர்ஸ்டர் ஸ்டோலனும் அவரது பாதுகாவலர் மைக்கேல் டி லூகாவும் செக்ஸ் உறவு கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அமெரிக்காவின் லாஸ் வேகாசிலி ஹில்டன் ஓட்டலில் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் தனது உறவினர்களுடன் 10 நாள் விடுமுறையை கழிக்க அங்கு வந்து தங்கியிருந்தார்.


முன்னதாக இவரை உறவினர் ஒருவர் சில்வர்ஸ்டர் ஸ்டோலனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு படத்தில் ஸ்டோலனின் மகனாக நடித்து இருந்தார். செக்ஸ் புகார் குறித்து அப்பெண் போலீசில் புகார் செய்திருந்தார்.

அதன் பின்னர் இந்த வி‌ஷயத்தை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார். ஏனெனில் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும். தாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயத்தில் அமைதியாக இருந்து விட்டார்.

தற்போது ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதை கூறியுள்ளார். அதற்கு நடிகர் சில்வர் ஸ்டார் ஸ்டோலன் மறுப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளார். இது ஒரு அபத்தமானது. ஜோடிக்கப்பட்ட பொய் கதை என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!