மகளின் சீர்வரிசையாக மாமனார் வழங்கிய பெட்டியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருமகன்…!


வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான கலாசாரம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சீதனமாகப் பாம்பும் பாம்புப் பெட்டியும் வழங்கும் மக்கள்; வவுனியாவில் சம்பவம்!

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில், இந்தியாவின் தெலுங்கு முறையைப் போன்று, வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று நடைபெற்றது.

மல்காந்தி என்ற பெண்ணுக்கும் அரவிந்த் குமார் என்ற ஆணுக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தின் பின்னர் மணமகளின் தந்தையினால், இருவருக்கும் பாம்பு மற்றும் பாம்பு பெட்டி என்பன சீதனமாக வழங்கப்பட்டு, இவர்கள், இதனூடாக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று இருவரையும் வாழ்த்தினார்.

இங்குள்ள சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதோடு, குரங்கு வித்தை காட்டுதல், பாம்பு வித்தை காட்டுதல் போன்றவற்றை சம்பிரதாயத் தொழிலாக கொண்ட இவர்கள், தமது நாளாந்த சீவியத்திற்காக தற்போது பயிர் செய்தல், மீன் பிடித்தல், பொருட்கள் விற்பனை செய்தல் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!