பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான 10 ஹார்மோன்கள் பற்றி தெரியுமா..?


உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசையாகவே இருக்கிறது. ஆனால் பெண்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் அவர்களது உடல் எடையை யும் தாக்கி விடுகின்றன.

ஆரோக்கியமான உணவால் மட்டுமே பெண்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க முடியாது. சில ஹார்மோன்களின் சமநிலையின்மை அவர்களின் உடல் எடையை அதிகரித்து விடுகிறது. தீராத பசி, தொப்பை, மெதுவான மெட்டா பாலிசம், சீரணமின்மை மற்றும் ஆற்றல் குறைவு போன்ற காரணங்கள் ஹார்மோன்களின் சமநிலையின்மை மாற்றத்தால் ஏற்படும் அறிகுறிகளாகும். இந்த பிரச்சினைகளே அவர்களின் உடல்வாகுகளையும் பாதித்து விடுகிறது.

ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் உடல் எடை கரையாத கொழுப்பு களால் ஏற்படுகிறது. ஹார்மோன் என்ற ஓன்று தான் ஒட்டு மொத்த உடலின் மெட்டா பாலிசம், மாதவிடாய், குளுக்கோஸ் மற்றும் அழற்சி போன்ற எல்லா செயல்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறது. பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை உருவாக வேறுபட்ட காரணங்கள் நிறையவே இருக்கின்றனர். முக்கியமான சில காரணங்களாவன : மன அழுத்தம், வயது, மரபணுக்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. இந்த கட்டுரையில் பெண்களுக்கு உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்தும் சில ஹார்மோன்களின் செயல்பாட்டை பற்றி பார்க்க போறோம்.


தைராய்டு தைராய்டு ஒரு சிறிய சுரப்பி. இது தமது கழுத்துக்கு கீழே அமைந்துள்ளது. இந்த தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள் மூன்று – டி3, டி4 மற்றும் கால்சிடோனின். இந்த ஹார்மோன்கள் மெட்டா பாலிசம், தூக்கம், இதய துடிப்பு, வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி போன்ற செயலாக்கத்தை செயல்படுத்தி கட்டுப்படுத்துகிறது. இந்த தைராய்டு சுரப்பி சுரக்கும் தைராய்டு ஹார்மோன்களின் அளவு அதிக்கரித்தால் அதற்கு ஹைப்போ தைராய்டிசம் என்று பெயர். ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குறைந்த இதய துடிப்பு ஏற்படும். தைராய்டு ஹார்மோனின் சமநிலையின்மையை ஈஸியாக இரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். தைராய்டு பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுவது நல்லது. மேலும் அயோடின் கலந்த உப்பு, பச்சை காய்கறிகளுக்கு பதிலாக சமைத்த காய்கறிகள், விட்டமின் டி அடங்கிய உணவுகள், ஜிங்க் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மருத்துவர் கொடுத்த தைராய்டு மாத்திரைகளையும் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

இன்சுலின் கணையத்தில் சுரக்கும் சிறிய சுரப்பி ஹார்மோன் தான் இன்சுலின். இந்த இன்சுலின் தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அதாவது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த இன்சுலின் ஹார்மோன் சமநிலையின்மையால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. நீங்கள் ஒரு நாள் முழுவதும் சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொண்டால் அதை இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் ஒரு நாள் முழுவதும் வேலை செய்கிறது. இதில் மிஞ்சிய சர்க்கரை சத்து கொழுப்பாக மாற்றம் பெற்று தங்குவதால் நமது உடல் எடையும் கூடுகிறது. இதற்கும் ஒரு சிறிய இரத்த பரிசோதனை மேற்கொண்டால் போதும் இரத்த சர்க்கரை அளவை கண்டு பிடித்து விடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், செயற்கை குளிர் பானங்கள் இவைகளில் அதிக சர்க்கரை சேர்ப்பதால் இவை உங்கள் சமநிலையான குளுக்கோஸ் அளவை இரத்தத்தில் அதிகரிக்க செய்து விடுகின்றன. மேலும் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

லெப்டின் இந்த ஹார்மோன் தான் தமது உடலுக்கு தேவையான உணவின் அளவை எடுத்துரைக்கிறது. இந்த ஹார்மோன் சமநிலையில் இருக்கும் போது தமது வயிறு நிறைந்து விட்டது. சாப்பிட்டது போதும் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என்பதை உரைக்கிறது. அதிக சர்க்கரை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை எடுக்கும் போது ப்ரக்டோஸ் கொழுப்பாக மாற்றம் பெற்று கல்லீரல், வயிறு மற்றும் உடலின் மற்ற பாகங்களில் தங்கி விடுகிறது. இந்த கொழுப்புகள் கரைய லெப்டின் அதிகமாக சுரக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் மூளைக்கு சிக்னல் போகாமல் குறைவாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தடைபடுகிறது. கடைசியாக இது உடல் எடை அதிகரிப்பில் கொண்டு சேர்த்து விடுகிறது. நல்ல தூக்கம், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் உணவு, போதுமான நீர்ச்சத்து இவற்றை பராமரித்தால் உடல் எடை அதிகரிப்பிலிருந்து தப்பிக்கலாம்.


க்ரெலின் க்ரெலின் ஹார்மோன் பசி ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது பசியை தூண்டி கொழுப்பு படிவதை அதிகரிக்கிறது. இது பொதுவாக வயிற்றில் தான் சுரக்கிறது. மேலும் சிறியவர்கள் அளவில் சிறுகுடல், மூளை மற்றும் கணையம் போன்றவற்றில் சுரக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு க்ரெலின் இருந்தால் நமது உடல் எடையும் கூடுகிறது. நிறைய பிரச்சினைக்களுக்கு இந்த ஹார்மோனே காரணமாகும். இரத்தத்தில் இந்த ஹார்மோன் அதிகமாகிவிட்டால் அப்பொழுது விரதம் அல்லது தீவிர டயட்டை மேற்கொள்ள வேண்டும். தவறாமல் சரியான நேரத்தில் உணவு சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்

ஈஸ்ட்ரோஜன் ஈஸ்ட்ரோஜன் அளவு சமநிலையில் இருக்க வேண்டும். இதன் அளவு அதிகமானலோ அல்லது குறைந்தாலோ பாதிப்பு ஏற்படும். இந்த ஹார்மோன் பெண்களின் கருப்பை செல்களால் சுரக்கப்படுகிறது. இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது., ஈஸ்ட்ரோஜன் அளவு சமநிலையில் இல்லாவிட்டால் நமது உடல் எல்லா ஆற்றலையும் கொழுப்பாக மாற்றுகிறது. இதன் விளைவு உடல் எடை கூடுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறிப்பாக மாமிசம், ஆல்கஹால், போன்ற உணவுகளை தவிர்த்தல் மற்றும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டால் ஈஸ்ட்ரோஜன் சமநிலையில் இருக்கும்.

கார்டிசோல் கார்டிசோல் என்ற ஹார்மோன் அட்ரீனல் சுரப்பியால் சுரக்கப்படுகிறது. இது ஒரு ஸ்டீராய்டு மாதிரி செயல்படுகிறது. இந்த ஹார்மோன் பொதுவாக மன அழுத்தம், டென்ஷன், மனக் கவலை, படபடப்பு, கோபம், ஆவலாக அல்லது எதாவது காயம் ஏற்பட்டால் போன்ற சமயங்களில் சுரக்கிறது. உங்கள் உடலில் உள்ள ஆற்றலை சீராக்கவும் மற்றும் ஆற்றல் மெட்டா பாலிசத்தை பராமரிக்க என்ற மிகப் பெரிய வேலைகளை செய்கிறது. உள்ளுறுப்புகளில் ஏற்படும் கொழுப்பு அதிகரிக்கும் போது கார்டிசோல் ஹார்மோன் சுரப்பும் அதிகமாகிறது. மன அழுத்தம் குறைதல், கவலை குறைதல், நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு போன்றவற்றால் இந்த ஹார்மோனை சமநிலையில் வைத்து கொள்ளலாம்.

டெஸ்டோஸ்டிரான் இந்த ஹார்மோன் குறிப்பாக ஆண்களுக்கு சுரக்கப்படும் ஹார்மோன் ஆகும். இருப்பினும் இந்த ஹார்மோன் பெண்களுக்கும் குறைந்த அளவு சுரக்கிறது. டெஸ்டோஸ்டிரான் கொழுப்பை கரைக்க, எலும்பு மற்றும் தசைகளை வலிமையாக்க, ஆண்மையை அதிகரிக்க போன்ற செயல்களுக்கு பயன்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்களுக்கு அதன் கருப்பையில் சுரக்கிறது. குறைவான அளவு டெஸ்டோஸ்டிரான் இருந்தால் மன அழுத்தம் அதிகரித்தல், நிறைய கொழுப்புகள் உடலில் தங்குதல் போன்றவை ஏற்படுகின்றன. ஆல்கஹாலை தவிர்த்தல், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் போன்ற முறைகளை கடைபிடித்தால் இந்த ஹார்மோன் சமநிலையில் இருக்கும்.


புரோஜெஸ்ட்டிரோன் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற இரண்டு ஹார்மோன்களின் சமநிலை மிகவும் முக்கியமானவை. அப்போ தான் உடம்பில் சரியான வேலைகள் நடக்கும். புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் அளவானது மாதவிடாய், மன அழுத்தம், கருத்தடை மாத்திரைகள் அல்லது அதற்கான உணவுகள் போன்றவற்றால் அதன் அளவு குறைகிறது. இதனால் உடல் எடை அதிகரித்தல், மன கவலை போன்றவைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை தவிர்த்தல், நல்ல தூக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொண்டால் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் அளவை பராமரிக்கலாம்.

மெலடோனின் இந்த ஹார்மோன் பினியல் சுரப்பியால் சுரக்கப்படுகிறது. இது தூங்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை பராமரிக்கின்றன. இந்த தொடர்வான செயல் இடையூறு அடைவதால் சரியான தூக்கம் வருவதில்லை. இதனால் மன அழுத்தம் அதிகரித்து உடல் எடையும் கூடி விடுகிறது. இரவில் நல்ல தூக்கம், இரவில் நொறுக்கு தீனிகளை தவிர்த்தல், உங்கள் கேஜெட்டுகளை படுப்பதற்கு முன் அணைத்து விட்டு செல்லுதல் போன்றவற்றை சரியான முறையில் மேற்கொண்டால் உடல் எடை அதிகரிப்பில் இருந்து தப்பித்து விடலாம்.

குளுக்கோகார்டிகாய்ட்ஸ் குளுக்கோகார்டிகாய்ட்ஸ் அழற்சியை குறைத்து இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், கொழுப்பு, புரோட்டீன் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோனின் சமநிலையின்மை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து இன்சுலின் சுரப்பையும் பாதிக்கிறது. எனவே இதனால் உடல் எடை அதிகரித்தல் மற்றும் டயாபெட்டீஸ் போன்ற நோய்களும் நம்மளை எட்டி பார்க்கின்றன. ஆரோக்கியமான உணவு, மன அழுத்தம் குறைதல், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள், போதுமான தண்ணீர் பருகுதல், நல்ல தூக்கம் இவற்றால் இந்த ஹார்மோன் சமநிலையில் இருந்து செயல்படுகிறது. தேவையென்றால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொண்டு சிகச்சை எடுத்து கொள்ளலாம். நீங்களா மருந்து மாத்திரைகள் எடுப்பதை அறவே தவிருங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!