குதிரையின் இறைச்சியை பச்சையாக சாப்பிடும் ஜப்பான் மனிதர்கள்! எதற்காக தெரியுமா..?


உலக நாடுகள் முழுவதும் என்னென்னவோ அற்புதங்களும் விநோதங்களும் நொடிக்கு நொடி நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.

உதாரணமாக உலக நாடுகளில் ஜப்பான் தான் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நாடாகக் கருதப்படுகிறது. அங்கு புதுப்புது கண்டுபிடிப்புகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன.

அதைத்தவிர ஜப்பானைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உலகில் பல்லி, பாம்பு என எதையுமே விட்டுவைக்காமல் சாப்பிடுபவர்கள் நிறைய பேர். ஆனால் வேகவைத்தோ நெருப்பில் சுட்டோ, கிரில் செய்தோ சாப்பிடுகிறார்கள். ஆனால் பச்சையாக சாப்பிட்டால்?

ஆம். ஜப்பானியர்கள் குதிரையின் இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த பழக்கம் கிடையாது. இந்த உணவுக்குப் பெயர் பசாஷி.

குதிரையின் இறைச்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டி, உப்பு சேர்த்து பச்சையாக அப்படியே சாப்பிடுகிறார்களாம். இதனால் ஜப்பானியர்களின் ஆயுள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்களின் சராசரி ஆயுட்காலத்தை விடவும் ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் 4 ஆண்டுகள் அதிகமாக இருக்கிறதாம்.

இதுபோல் ஜப்பான் பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் பல உள்ளன. அவை,

ஜப்பானியர்களின் எழுத்தறிவு சதவீதம் 100 சதவீதம்.

ஜப்பானில் வேலைவாய்ப்பின்றி இருப்பவர்கள் வெறும் 4 சதவீதம் மட்டுமே.


ஜப்பான் 70 சதவீதத்துக்கும் மேல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 200 எரிமலைகளும் 6800 தீவுகளும் உள்ளன.

உலகிலேயே முலாம்பழம் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் நாடு ஜப்பான் தானாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!