டிவி நிகழ்ச்சியின் போது எதிர்பாரா விதமாக ஆடை விலகியதுக்காக பெண் நிருபர் மீது வழக்கு..!


சவுதி அரேபியாவில் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது எதிர்பாராதவிதமாக ஆடை விலகியதற்காக பெண் நிருபர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் சமீபகாலத்துக்கு முன்பு பொறுப்பேற்றார். இதன் பின்னர் அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார்.

அந்த வகையில், பல ஆண்டுகளாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தி வருகிறார்.

அதில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்கும் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தார். இது சவுதி பெண்களிடையே வெகுவாக வரவேற்கப்பட்டது.

மேலும், அந்நாட்டு பெண்கள் தாங்கள் காரை இயக்குவது போல் செஃல்பி எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதுத் தொடர்பாக சவுதியின் செய்தி சேனல் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்பு, சிறப்பு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது.

இந்த நிகழ்ச்சியை, பெண் நிருபர் ஷிர்ரீன் அல்-ரிபாய், ரோட்டில் நடந்தவாறே தொகுத்து வழங்கினார். அப்போது காற்று வேகமாக வீசிய நிலையில், அவர் அணிந்திருந்த ஆடை சற்று விளகியது. அதனை அவர் உடனடியாக அதை அவர் சரி செய்துகொண்டார்.

ஆனால், இந்தக் காட்சிகளைப் பார்த்த அந்நாட்டு உயர் அதிகாரிகள், ஷிர்ரீன் அநாகரிகமான உடை அணிந்ததாகக் கூறி, அவரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ‘இந்த சம்பவத்தில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!