நைஜீரியாவுக்கு எதிராக மெஸ்சி அடித்த முதல் கோல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!


உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக மெஸ்சி அடித்த கோல் இந்த உலக கோப்பையில் 100-வது கோல் ஆக பதிவாகி உள்ளது.

உலக கோப்பையில் மெஸ்சியின் முதல் கோல், ஆனாலும் அது அனைவருக்கும் ஸ்பெஷல்
அர்ஜென்டினா கேப்டனும், உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான லியோனஸ் மெஸ்சி நைஜீரியாவுக்கு எதிராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அவர் 14-வது நிமிடத்தில் மிகவும் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் இது 100-வது கோலாகும். 40 ஆட்டங்கள் முடிவில் 105 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 2.63 ஆகும்.

இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் 5 கோல்கள் அடித்து முன்னணியில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தை பெல்ஜியம் வீரர் ரொமெலு லுகாகு 4, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்களுடன் உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!