ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது..!


உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் 14-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால்
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸ்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் மொராக்கோ வெல்லும் என எதிர்பார்த்தனர்.

ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட நிமிடங்களில் முதலிலேயே, 91வது நிமிடத்தில் ஸ்பெயினின் லாகோ அஸ்பாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

இறுதியில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதனால் இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி கிடைத்தது. ஆனாலும், புள்ளிகள் அடிப்படையில் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றில் நுழைந்தது. அடுத்த சுற்றில் ரஷ்யா அணியுடன் மோதவுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!