உலக கோப்பை கால்பந்தில் 2-வது சுற்றுக்கு நுழையும் அணிகள் எவை?

உலக கோப்பை கால்பந்தில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன அணிகள் குறித்து காண்போம்.

உலக கோப்பை கால்பந்தில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதுவரை 6 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கடைசி கட்ட ‘லீக்’ ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

2-வது சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது பற்றி விவரம்:-

‘ஏ’ பிரிவில் இருந்து போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் ரஷிய அணி உருகுவேயை வீழ்த்தி முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இந்த பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் எகிப்து- சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

‘பி’ பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுக்கல் அணிகள் ஒரு வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஈரான் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று இருக்கிறது. மொராக்கோ 2 தோல்வியுடன் வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின்- மொராக்கோ, போர்ச்சுக்கல்- ஈரான் அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் அணி ‘டிரா’ செய்தாலே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை அதிர்ச்சிகரமாக தோற்றால் போர்ச்சுக்கல்- ஈரான் ஆட்டத்தை பொறுத்து முடிவு அமையும். போர்ச்சுக்கல் அணியை பொறுத்தவரை ‘டிரா’ செய்தாலே தகுதி பெற்று விடும். ஈரான் அணி தகுதி பெற போர்ச்சுக்கலை கண்டிப்பாக வீழ்த்தி ஆக வேண்டும். ஆனால் போர்ச்சுக்கல் பலம் வாய்ந்தவை என்பதால் மிகவும் கடினம். ஸ்பெயின், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சி’ பிரிவில் பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் தகுதி பெற்று விட்டது. டென்மார்க் 4 புள்ளியுடனும், ஆஸ்திரேலியா 1 புள்ளியுடன் உள்ளன. பெரு அணி புள்ளி எதுவும் பெறாமல் வெளியேற்றப்பட்டது.

இந்த பிரிவில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்- டென்மார்க், ஆஸ்திரேலியா- பெரு அணிகள் மோதுகின்றன. டென்மார்க், ஆஸ்திரேலியா அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

டென்மார்க் அணி ‘டிரா’ செய்தாலே தகுதி பெற்றுவிடும். அந்த அணி பிரான்சை வீழ்த்தினால் ‘சி’ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியா- பெரு ஆட்டத்தை பொறுத்து அமையும்.

ஆஸ்திரேலிய அணி பெருவை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அதே நேரத்தில் டென்மார்க் மோசமாக தோற்க வேண்டும். அப்படி நடந்தால் ஆஸ்திரேலியா வாய்ப்பை பெறும். டென்மார்க் வலுவான அணி அந்த அணியை 2-வது சுற்றில் நுழைய அதிகமான வாய்ப்பு உள்ளது.

‘டி’ பிரிவில் குரோஷியா 6 புள்ளியுடன் தகுதி பெற்றுவிட்டது. நைஜிரியா 3 புள்ளியுடனும், ஐஸ்லாந்து, அர்ஜென்டினா தலா 1 புள்ளியுடனும் உள்ளன. நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜென்டினா- நைஜிரியா, குரோஷியா- ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன. அர்ஜென்டினா 2-வது சுற்றுக்கு நுழைய வேண்டுமானால் நைஜிரியாவை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அதேநேரத்தில் ஐஸ்லாந்து அணி குரோஷியாவிடம் தோற்க வேண்டும். ஒருவேளை நைஜீரியாவை வீழ்த்தி ஐஸ்லாந்து வென்றால் அர்ஜென்டினாவின் நிலை கஷ்டம் தான்.

ஏனென்றால் கோல் வித்தியாசத்தில் மோசமாக இருக்கிறது. இதனால் நைஜீரியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். நைஜீரியாவிடம் தோற்றால் அர்ஜென்டினா வெளியேற்றப்படும்.

நைஜீரியாவை பொறுத்தவரை அர்ஜென்டினாவை வீழ்த்தி தகுதி பெற்றுவிடும். அர்ஜென்டினா- நைஜீரியா ஆட்டம் டிராவில் முடிந்து ஐஸ்லாந்து வெற்றி பெற்றால் நைஜீரியா, ஐஸ்லாந்து சமபுள்ளி பெறும். கோல் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். கோல் அடிப்படையில் நைஜீரியா தற்போது நல்ல நிலையில் இருக்கிறது.

‘இ’ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடனும் செர்பியா 3 புள்ளியும் பெற்றுள்ளது. கோஸ்டாரிகா புள்ளி எதுவும் பெறாமல் வெளியேற்றப்பட்டது.

27-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா, சுவிட்சர்லாந்து- கோஸ்டாரிகா அணிகள் மோதின. பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் ‘டிரா’ செய்தாலே தகுதி பெற்றுவிடும். பிரேசில் அணியை செர்பியா வீழ்த்தினால் நாக்அவுட்டுக்கு சென்றுவிடும். ஆனால் அதற்கான வாய்பபு குறைவே. சுவிட்சர்லாந்து அணி கோஸ்டாரிகாவை வீழ்த்தினால் தகுதி பெற்றுவிடும்.

‘எப்’ பிரிவில் மெக்சிகோ 6 புள்ளியுடனும், ஜெர்மனி, சுவீடன் தலா 3 புள்ளியுடனும் உள்ளன. தென் கொரியா புள்ளி எதுவும் பெறவில்லை. 27-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மெக்சிகோ- சுவீடன், ஜெர்மனி- தென்கொரியா மோதுகின்றன.

மெக்சிகோ ‘டிரா’ செய்தாலே அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்துவிடும். சுவீடன் அணியை பொறுத்தவரை மெக்சிகோவை கண்டிப்பாக அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

ஜெர்மனி அணி தென்கொரியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. நடப்பு சாம்பியனான அந்த அணி கடைசி ஆட்டத்தில் அதிரடியாக ஆட முயற்சிக்கும். தென்கொரியாவுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே.

‘ஜி’ பிரிவில் இங்கிலாந்து, பெல்ஜியம் 6 புள்ளியுடன் தகுதி பெற்றுவிட்டன. இந்த இரு அணிகளும் 28-ந்தேதி இரவு 11.30 மணிக்கு மோதுகின்றன. வெற்றிபெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். இந்த பிரிவில் துனிசியா, பனாமா அணிகள் வெளியேற்றப்பட்டன.

‘எச்‘ பிரிவில் 2-வது சுற்றில் நுழைய ஜப்பான், செனகல், கொலம்பியா அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. போலந்து வாய்ப்பை இழந்துவிட்டது. 28-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பான்- போலந்து, செனகல்-கொலம்பியா மோதுகின்றன.

ஜப்பான், செனகல் தலா 4 புள்ளிகளுடனும், கொலம்பியா 3 புள்ளிகளுடனும் உள்ளன. #FIFA2018 #WorldCup2018
உலக கோப்பை கால்பந்தில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதுவரை 6 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள் ளன. கடைசி கட்ட ‘லீக்’ ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

2-வது சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது பற்றி விவரம்:-

‘ஏ’ பிரிவில் இருந்து போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் ரஷிய அணி உருகுவேயை வீழ்த்தி முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இந்த பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் எகிப்து- சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேற்றப் பட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இரு அணிகளும் முதல் வெற்றிக் காக காத்திருக்கிறது.

‘பி’ பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுக்கல் அணிகள் ஒரு வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஈரான் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று இருக் கிறது. மொராக்கோ 2 தோல்வியுடன் வெளி யேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின்- மொராக்கோ, போர்ச்சுக்கல்- ஈரான் அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் அணி ‘டிரா’ செய்தாலே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை அதிர்ச்சிகரமாக தோற்றால் போர்ச்சுக்கல்- ஈரான் ஆட்டத்தை பொறுத்து முடிவு அமையும். போர்ச்சுக்கல் அணியை பொறுத்தவரை ‘டிரா’ செய்தாலே தகுதி பெற்று விடும். ஈரான் அணி தகுதி பெற போர்ச்சுக்கலை கண்டிப்பாக வீழ்த்தி ஆக வேண்டும். ஆனால் போர்ச்சுக்கல் பலம் வாய்ந்தவை என்பதால் மிகவும் கடினம். ஸ்பெயின், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சி’ பிரிவில் பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் தகுதி பெற்று விட்டது. டென்மார்க் 4 புள்ளியுடனும், ஆஸ்திரேலியா 1 புள்ளியுடன் உள்ளன. பெரு அணி புள்ளி எதுவும் பெறாமல் வெளியேற்றப்பட்டது.

இந்த பிரிவில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்- டென்மார்க், ஆஸ்திரேலியா- பெரு அணிகள் மோதுகின்றன. டென்மார்க், ஆஸ்திரேலியா அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

டென்மார்க் அணி ‘டிரா’ செய்தாலே தகுதி பெற்றுவிடும். அந்த அணி பிரான்சை வீழ்த்தினால் ‘சி’ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியா- பெரு ஆட்டத்தை பொறுத்து அமையும்.

ஆஸ்திரேலிய அணி பெருவை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அதே நேரத்தில் டென்மார்க் மோசமாக தோற்க வேண்டும். அப்படி நடந்தால் ஆஸ்திரேலியா வாய்ப்பை பெறும். டென்மார்க் வலுவான அணி அந்த அணியை 2-வது சுற்றில் நுழைய அதிகமான வாய்ப்பு உள்ளது.

‘டி’ பிரிவில் குரோஷியா 6 புள்ளியுடன் தகுதி பெற்றுவிட்டது. நைஜிரியா 3 புள்ளியுடனும், ஐஸ்லாந்து, அர்ஜென்டினா தலா 1 புள்ளியுடனும் உள்ளன. நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜென்டினா- நைஜிரியா, குரோஷியா- ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன. அர்ஜென்டினா 2-வது சுற்றுக்கு நுழைய வேண்டு மானால் நைஜிரியாவை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அதேநேரத்தில் ஐஸ்லாந்து அணி குரோஷியாவிடம் தோற்க வேண்டும். ஒருவேளை நைஜீரியாவை வீழ்த்தி ஐஸ்லாந்து வென்றால் அர்ஜென்டினாவின் நிலை கஷ்டம் தான்.

ஏனென்றால் கோல் வித்தியாசத்தில் மோசமாக இருக்கிறது. இதனால் நைஜீரியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். நைஜீரியாவிடம் தோற்றால் அர்ஜென்டினா வெளியேற்றப்படும்.

நைஜீரியாவை பொறுத் தவரை அர்ஜென்டினாவை வீழ்த்தி தகுதி பெற்றுவிடும். அர்ஜென்டினா- நைஜீரியா ஆட்டம் டிராவில் முடிந்து ஐஸ்லாந்து வெற்றி பெற்றால் நைஜீரியா, ஐஸ்லாந்து சமபுள்ளி பெறும். கோல் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். கோல் அடிப்படையில் நைஜீரியா தற்போது நல்ல நிலையில் இருக்கிறது.

‘இ’ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடனும் செர்பியா 3 புள்ளியும் பெற்றுள்ளது. கோஸ்டாரிகா புள்ளி எதுவும் பெறாமல் வெளியேற்றப்பட்டது.

27-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா, சுவிட்சர்லாந்து- கோஸ்டாரிகா அணிகள் மோதின. பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் ‘டிரா’ செய்தாலே தகுதி பெற்றுவிடும். பிரேசில் அணியை செர்பியா வீழ்த்தினால் நாக்அவுட்டுக்கு சென்றுவிடும். ஆனால் அதற்கான வாய்பபு குறைவே. சுவிட்சர்லாந்து அணி கோஸ்டாரிகாவை வீழ்த்தி னால் தகுதி பெற்றுவிடும்.

‘எப்’ பிரிவில் மெக்சிகோ 6 புள்ளியுடனும், ஜெர்மனி, சுவீடன் தலா 3 புள்ளி யுடனும் உள்ளன. தென் கொரியா புள்ளி எதுவும் பெறவில்லை. 27-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மெக்சிகோ- சுவீடன், ஜெர்மனி- தென்கொரியா மோதுகின்றன.

மெக்சிகோ ‘டிரா’ செய்தாலே அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்துவிடும். சுவீடன் அணியை பொறுத்தவரை மெக்சிகோவை கண்டிப்பாக அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

ஜெர்மனி அணி தென்கொரியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வாய்ப்பு இருக்கிறது. நடப்பு சாம்பியனான அந்த அணி கடைசி ஆட்டத்தில் அதிரடியாக ஆட முயற்சிக்கும். தென்கொரியாவுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே.

‘ஜி’ பிரிவில் இங்கிலாந்து, பெல்ஜியம் 6 புள்ளியுடன் தகுதி பெற்றுவிட்டன. இந்த இரு அணிகளும் 28-ந்தேதி இரவு 11.30 மணிக்கு மோதுகின்றன. வெற்றிபெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். இந்த பிரிவில் துனிசியா, பனாமா அணிகள் வெளியேற்றப்பட்டன.

‘எச்‘ பிரிவில் 2-வது சுற்றில் நுழைய ஜப்பான், செனகல், கொலம்பியா அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. போலந்து வாய்ப்பை இழந்துவிட்டது. 28-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பான்- போலந்து, செனகல்-கொலம்பியா மோதுகின்றன.

ஜப்பான், செனகல் தலா 4 புள்ளிகளுடனும், கொலம்பியா 3 புள்ளிகளுடனும் உள்ளன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!