பரபரப்பான ஆட்டத்தில் செர்பியாவை 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்றது சுவிட்சர்லாந்து..!


உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கோல் அடித்து 2 – 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியை சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இ பிரிவில் இடம் பிடித்துள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில் செர்பிய அணியின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் கிரானிட் சாகா 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து, ஆட்டம் முடியும் நிலையில் பரபரப்பான 90-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி ஒரு கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து கூடுதலா கொடுத்த 6 நிமிடங்களில் செர்பிய அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், செர்பிய அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் பெற்றது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!