உதவியாளராக பணியில் சேர்ந்து ரூ.100 கோடி சொத்து குவித்த அதிகாரி..!! போலீஸ் அதிரடி..!!


ஆந்திர மாநிலம் நெல்லூரில் கலாளியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி ரெட்டி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லட்சுமிரெட்டி வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.

இதில் பல ஏக்கர் விவசாய நிலங்களின் பத்திரங்கள், ஆடம்பர பங்களா, கார்கள், வங்கியில் ரூ.9 லட்சம், 23 பவுன் நகை உள்பட பல சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது தெரிந்தது.

லட்சுமி ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

லட்சுமி ரெட்டி 1993-ம் ஆண்டு மின்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு உதவி லைன் மேனாகவும், 1997-ம் ஆண்டு லைன்மேனகாவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பின் 2017-ம் ஆண்டு லைன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.

சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்த லட்சுமி ரெட்டி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

அவர் பணியில் சேர்ந்து 25 ஆண்டில் இவ்வளவு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!