உலகக்கோப்பை கால்பந்து- ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ


உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா அணி கேஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜெர்மனி – மெக்சிகோ அணிகள் மோதின.

முதல் பாதி நேரத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஹிர்விங் லொசானோ கோ அடித்தார். இதனால் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து நடைபெற உள்ள மூன்றாவது ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #GERMEX – Source: maalaimalar