சென்னையில் நடந்த கொடூரம் – மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த தங்கையின் கணவர்..!


மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியின் அக்காவை ஏமாற்றி கற்பழித்து கர்ப்பமாக்கிய தங்கையின் கணவரை கைது செய்தனர்.

சென்னைதண்டையார்பேட்டை யை சேர்ந்தவர்கோவிந்தம்மாள். இவருக்கு ஜெயந்தி, லட்சுமி என்ற 2 பேத்திகள் உள்ளனர். ஜெயந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர்.

கடந்த 3 ஆண்டுக்கு முன்பு விழுப்புரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக தண்டையார்பேட்டை வந்துள்ளார். அப்போது, லட்சுமிக்கும் வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதைதொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு கடந்த ஆண்டு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த குழந்தையை பாட்டி கோவிந்தம்மாள் வளர்த்து வருகிறார். மனைவி இறந்த பின்னர் வெங்கடேசன், விழுப்புரம் சென்றுவிட்டார்.

ஆனால் அவ்வப்போது குழந்தையை பார்ப்பதற்காக தண்டையார்பேட்டை வருவது வழக்கம். அந்த சமயத்தில் ஜெயந்தியிடம் நைசாக பேசி அவரை வெங்கடேசன் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து, ஜெயந்திக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதனால், சந்தேகமடைந்து அவரது பாட்டி, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை சோதனை செய்த மருத்துவர்கள், ஜெயந்தி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி கோவிந்தம்மாள், இதுகுறித்து ஜெயந்தியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், இதற்கு தங்கையின் கணவர் வெங்கடேசன் தான் கற்பத்திற்கு காரணம் என கூறியுள்ளார். இதுகுறித்த, ஆர்கே நகர் போலீசில், கோவிந்தம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!