சுட்டெரிக்கும் வெயிலில் நெருப்பு குளியல்.. குளிரில் ஐஸ் க்ரீம் சாப்பிடும் விசித்திர மனிதர்..!


ஹரியானா மாநிலத்தில், கொளுத்தும் வெயிலிலும் குளிர்வதாக கூறி போர்வையை போர்த்திக் கொண்டு, நெருப்பில் குளிர் காயும் விந்தை மனிதர் வசித்து வருகிறார்.

டிரோலி (Deroli) எனும் கிராமத்தைச் சேர்ந்த சாந்த்ராம் என்பவர், வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில், நெருப்பை மூட்டி குளிர் காய்வதுடன், கனமான போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார்.

குளிர்காலத்திலோ, வெப்பம் தகிப்பதாக கூறி நிறைய ஐஸ் க்ரீமை வாங்கிச் சுவைத்து, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். குழந்தைப் பருவத்தில் இருந்தே சாந்த்ராம் இதேபோல் வினோதமான பழக்க வழக்கங்களையே கடைப்பிடித்து வருவதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.-Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!