தினமும் ஒரு துண்டு தக்காளி போதும்.. நம்ப முடியலையா? இத முதல்ல படிங்க..!!


தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது.


தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் என்ன நடக்கும்?
தக்காளியில் விட்டமின் A, C உள்ளது. எனவே இதை முகத்தில் தேய்க்கும் போது, முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும் மேடு, பள்ளங்களை தடுக்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.


வெயிலால் ஏற்பட்ட கருமையை போக்க தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதை தடுக்க, தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.


தினமும் மாலையில் முகத்தைக் கழுவி, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் பொலிவாகும்.


தக்காளி சாற்றுடன், தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் 1 முறை பின்பற்றினால் நல்ல பலனை பெறலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!