அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக வடகொரியா மாறும் – கிம் ஜாங் அன் உறுதி..!


உலக நாடுகளின் எதிர் பார்ப்புகளின் படி திட்டமிட்ட படி இன்று காலை சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக வடகொரியா மாறும் என்று டிரம்ப்பும் உலகின் மிகப் பெரிய மாற்றத்தைக் காண பழைய சம்பவங்களை மறப்போம் என கிம்மும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இரு தலைவர்களும் கையெழுத்திட்ட ஆவணம் என்ன என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.

டிரம்ப் இது குறித்து கூறும் போது “அழகான விரிவான ஆவணம்,” என் அகூறினார் ஆனால் அதில் உள்ளவிவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

செய்தியாளர்கள் மாநாட்டில் “இந்த பெரிய ஆவணம்” மற்றும் அது பகிரங்கமாக வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.டிரம்ப் அவர் கிம் உடனான “சிறப்பு பத்திரத்தை” உருவாக்கியதாக கூறினார்.

வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என அதன் தலைவர் கிம் அறிவித்து உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!