உலகின் மிகப்பெரிய முத்து எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா..?


உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது. 120 கிராம் எடையும், 7 செ.மீட்டர் நீளமும் கொண்டது. தூங்கும் சிங்கம் போன்ற வடிவிலானது.

இதுமற்ற முத்துகளை விட 3 மடங்கு பெரியது. 18-ம் நூற்றாண்டில் சீனாவில் உள்ள ஆற்றில் விளைந்த முத்து சிப்பியில் உருவானது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!