குரு தோஷமா..? வியாழக்கிழமையில் கட்டாயம் மஞ்சள் நிற ஆடையை ஏன் அணிய வேண்டும்..?


குரு தோஷத்தால் அவதிபட்டு வருபவர்கள் வியாழக்கிழமை தினங்களில் விரதம் இருக்கும் போது மஞ்சள் நிற ஆடையை உடுத்த வேண்டியது அவசியமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தை பெறுகிறார் குருபகவான். வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதத்திற்கு குருவார விரதம் என்று பெயர். முக்கியமான விரதங்களில் இந்த விரதமும் ஒன்றாக கருதப்படுகிறது.

குரு பகவானால் பாதிப்பு உள்ளவர்கள் இந்த குருவார விரதம் மேற்கொள்வது சிறப்பு. குருவார விரதம் இருக்கும் தினங்களில் ராகவேந்திரர், சாய் பாபா வழிபாடு செய்வது விசேஷமானது. இதனால் பலன் இரட்டிப்பாகும்.

குரு பகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள். எனவே குரு தோஷத்தால் அவதிபட்டு வருபவர்கள் அந்த தினங்களில் மஞ்சள் நிற ஆடையை உடுத்தி வருவது நல்லது. வார வாரம் மஞ்சள் நிற ஆடையை தேட முடியாது இல்லையா? எனவே மஞ்சள் நிற கைக்குட்டை போன்றவைகளையாவது தன்வசம் வைத்திருப்பது நல்லது.

மஞ்சள் நிற ஆடைகளை பிறருக்கு தானம் செய்வது குரு பகவானுக்கு உரிய பரிகாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் மஞ்சள் நிற ஆடை உடுத்துபவர்களுக்கு குரு அருள் நிரம்பக் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!