நடிகர் ரஜினியை துரத்திச் சென்ற ரசிகன்! வைரலான புகைப்படம்..!


நடிகர் ரஜினிகாந்த் ஏர்போர்ட் செல்லும்போது அவரை பல கிலோ மீட்டர் வரை ரசிகர் ஒருவர் துரத்திச் சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதற்காக இன்று காலை 8 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ஏர்போர்ட் சென்றார். அப்போது ரசிகர் ஒருவர் ரஜினியை வீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை துரத்தி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இதை பார்த்த ரஜினி காரை நிறுத்தியுள்ளார்.


கார் நின்றதும் அந்த இளைஞனை கூப்பிட்டு ஏன்பா என் பின்னாலே வருகிறாய் என்று கேட்க அதற்கு அந்த இளைஞன் ‘சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன், உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்’ என்று கேட்டான்.

ரஜினியும் மெல்ல சிரித்தப்படிஅவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படத்தை அந்த ரசிகன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளான்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!