இயேசு கிறிஸ்துவுக்குப் பதில் அதிபர் ஜீ ஜின்பிங் படம்… விளக்கம் உள்ளே…!


மதசார்பற்ற நாடாக விளங்கும் சீனாவில் உள்ள கிராமப் பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவர்களின் வீடுகளில், அதிபர் ஜி ஜின்பிங் படத்தை வைக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தவதாகக் அந்நாட்டின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

தென்கிழக்கு சீனாவில் உள்ள கிறிஸ்தவர்கள், வறுமைக்கு எதிராக போராடுவதற்கு அதிபர் ஜீ ஜின்பிங் உதவுகிறார் இயேசு கிறிஸ்து அல்ல என கிறிஸ்து புகைப்படத்தை எடுத்து விட்டு ஜி ஜின்பிங் புகைப்படத்தை வைத்து உள்ளனர். இது குறித்து புகைப்படத்துடன் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சீனாவின் யூகன் கவுண்டியில் உள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு, உள்ளூர் அதிகாரிகள், வறுமையில் இருந்து காப்பாற்ற அல்லது நோய்களை குணப்படுத்தவோ இயேசுகிறிஸ்துவால் முடியாது அதிபர்தான் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவே கிறிஸ்துவின் படங்களை எடுத்துக் கொண்டு, அதிபர் ஜி ஜின்பிங் ஒரு நல்ல புகைப்படத்தை வைக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

இந்த தகவல், சீனாவில் வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியாகியிருப்பதன் மூலம் உலகுக்கு தெரிய வந்துள்ளது. சீனாவில் ஒரு கோடி மக்களில் 11 சதவீதத்தினர் நாட்டின்வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் கிட்டத்தட்ட 10 சதவீதம் கிறிஸ்துவர் என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் கூறி உள்ளது. நிச்சயமாக மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை எடுப்பதில் உடன்பாடு இருக்காது. ஆனால் வேறு வழியே இல்லை.

அவர்களுக்குக் கிடைக்கும் நல உதவிகளையும், வறுமை நிவாரண நிதியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவிக்கிறது.

மதசார்பற்ற நாடாக இருக்கும் சீனாவில், தற்போது ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள், மக்களிடம் இருக்கும் மத நம்பிக்கையை போக்கிவிட்டு, கட்சி நம்பிக்கையை மட்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருவதற்கு இது ஒன்றே மிகப்பெரிய உதாரணமாக உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, யோகன் மாவட்டத்தில் கிராமவாசிகள் கிறிஸ்தவர்கள் 624 சுவரொட்டிகள் “விருப்பத்துடன்” அகற்றி உள்ளனர். 453 அதிபர் ஜி ஜின்பிங் புகைப்படங்கள் மாற்றப்பட்டு உள்ளது என கூறி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!