யார் இந்த காடுவெட்டி குரு..! அதிர்ச்சி வீடியோ..!!


சென்னை அப்பேலோ மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த காடுவெட்டி குரு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

காடுவெட்டி குரு

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உடல் நலப் பாதிப்பு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வருடங்களால் அவர் ‘நுரையீரல் மற்றும் தொண்டை உள்ள திசுக்கள் பாதிப்பு நோயால்’ அனுமதிப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலை, இரவு என இரண்டு நேரங்களிலும் ராமதாஸ், மற்றும் அன்புமணிராமதாஸ் நலம் விசாரித்துவிட்டுச் சென்றிருந்தனர். குருவை எனது மூத்த மகனாகவே நான் கருதுகிறேன் எனப் பல மேடைகளில் பேசியிருக்கிறார் ராமதாஸ்.

யார் இந்த குரு?

பாம.க.வின் வன்னியர் சங்கத்தலைவர் குருநாதன் என்கிற குரு. அவரது சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி தான் . 1986-ல் காடு வெட்டியில் தி.மு.கவின் கிளைச் செயலாளராக இருந்தவர் இந்த குரு. தி.மு.கவில் வன்னியர்களுக்கு அவர்களது பகுதியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதாலும் வன்னியர் சங்கத்தை விரிபடுத்துவதற்காக எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் அகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இனைக்கிறார்கள். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகிக்றார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பிறகு நடந்த 2006 சட்டமன்ற தேர்தல், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். மீண்டும் , 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். – Source: Vikatan