இலங்கையில் பிஞ்சு குழந்தைகளை தாக்கும் கொடிய நோய் – இதுவரை 15 குழந்தைகள் பலி..!


இலங்கையில் உள்ள தென் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

குறிப்பாக 1 வயதில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளை இந்த காய்ச்சல் தாக்குகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 15 குழந்தைகள் பலியாகி உள்ளன.

தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரவி உள்ளது. பள்ளிக்கூடங்கள் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது, என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை. ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நேற்று முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர்.

மாத்தழை, முலடியானா, அகுரைச, தங்காலை, வலையமுள்ள, காலி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கராபிட்டி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!