சுனாமி பீதியால் பெரும் பதற்றத்தில் மக்கள்…!


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடியிலுள்ள 50 திட்டத்திலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டகளப்பு, நவலடி பகுதியிலுள்ள பாடசாலை மூடப்பட்டு அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மணவர்கள் ஆகியோர் வெளிறேறிவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பை அண்டிண பகுதியிலுள்ள கடற்பகுதி சீற்றமாக காணப்படுவதாகவும் களுவாஞ்சிக்குடி 50 வீட்டத்திட்டத்திலுள்ள கிணறுகளில் நீர் திடீரென வற்றியதால் சுனாமி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பீதியால் இவ்வாறு பதற்றமடைந்துள்ளதாகவும் எனவே மக்கள் எவ்விதமான அச்சமடையத் தேவையில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!