240 கோடி ரூபாய்க்காக ஸ்ரீ தேவி கொலை செய்யப்பட்டாரா..? அதிரவைக்கும் புதிய தகவல்…!


கடந்த பெப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற போது அங்கு உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டாலும் அதன்பின் தடவியல்துறை உடற்கூறு ஆய்வு அறிக்கையில் மது அருந்தியதால் தான் ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் விழுந்து ஸ்ரீதேவி மரணமடைந்தார் என சொல்லப்பட்டது.

பின்னர் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என அவரின் குடுபத்தினரும் உறவினர்களும் கூறியதை அடுத்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அவரின் மரணத்தில் ஏதோ ஒரு சந்தேகம் இருப்பதாக கூறிய பொலிவுட் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

மரணம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மனு இன்று விசாரணை களத்திற்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது.

நடிகை ஸ்ரீதேவிக்கு ஓமனில் 240 கோடி ரூபாய்க்கு காப்பீடு திட்டம் இருந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் மரணமடைந்தால் மட்டுமே இந்த காப்பீடு தொகை கிடைக்கும். ஆகவே அவர் துபாயில் மரணித்தது சந்தேகத்துக்குரிய ஒரு விடயமாகும். இது குறித்து மனுதாரர் சுனில் சிங் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. வழக்கறிஞராக விகாஸ் சிங் வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் துபாய் பொலிஸார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படுவதற்கு ஏதும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவைிட்டனர். ஆயினும் சுனில் சிங்யின் மனுவானது மரணத்தோடு ஒத்துப்போவதால் இது பற்றிய சந்தேகம் தீராது என்பது உண்மையே.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!