சேர்ந்து வாழ மறுத்த கணவருடன் சேர்த்து வைக்க நான்காயிரம் லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி கைது…!


சேர்ந்து வாழ மறுக்கும் கணவருடன் வாழ வைப்பதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சகேட்ட பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தேவீரஹள்ளியைச் சேர்ந்தவ தனலட்சுமி (38). இவர், சந்திரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால்,சந்திரன் தனலட்சுமியுடன் உறவு வைத்து விட்டு, திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, அவ்வூர் பெரியவர்களைக் கூட்டிபஞ்சாயத்து செய்து சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே, சந்திரன் தனலட்சுமியை ஒதுக்கி வெறுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு இருவருக்கும் அடிக்கடி பிரச்சனைஏற்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனலட்சுமி, பர்கூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுததார். புகாரைப் பெற்றுக் கொண்ட மகளிர் போலீசார், கணவன் – மனைவிஇருவருக்கும் ஆலோசனை வழங்க சமூக நலத்துறைக்குப் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.


அவர்கள் இருவருக்கும், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் குடும்பநலம் வன்முறைதடுப்பு சட்டம் அலுவலகத்தில் ஆலோசனைகள்வழங்கப்பட்டன. கவுன்சிலிங்கின்போது சந்திரனுடன் வாழ தனலட்சுமி ஒப்பு கொண்டார். ஆனால் சந்திரன், தனலட்சுமியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லைஎன்று மறுத்து விட்டார்.

இதனை அடுத்து குடும்பநல வன்முறை தடுப்பு பாதுகாப்பு அலுவலர் கவிதா, இந்த பிரச்சனையை இருவரும் நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளும்படி பரிந்துரை
அறிக்கையை தயார் செய்துள்ளார். இந்த நிலையில், தனலட்சுமியிடம் பேசிய அலுவலர் கவிதா, தனலட்சுமியிடம் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் கணவருடன்சேர்த்து வைப்பதாக லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தனலட்சுமி, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசாயன பவுடர் தடவிய 4 ஆயிரம்ரூபாய் நோட்டுகளை தனலட்சுமியிடம் அவர்கள் கொடுத்தனர். கிருஷ்ணகிரி குடும்பநல பாதுகாப்பு அலுவலகம் வந்த தனலட்சும், ரசாயனம் தடவிய ரூபாய்நோட்டுகளை, கவிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவிதாவை கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!