என்னை ஸ்டாலின் கடத்தினாரா? – பாத்திமா பாபு அதிரடி பதில்..!


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை கடத்திக் கொண்டு செல்லவில்லை என நடிகையும், ஜெயா தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இளைஞராக இருந்த போது, அப்போது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை கடத்தி சென்றார் என்ற செய்தி பல வருடங்களாக உலா வருகிறது. திமுகவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் கூறப்படும் போது, இந்த விவகாரமும் பலரால் குறிப்பிடப்பட்டு, இப்போதும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

பல வருடங்களாக பேசப்பட்டு வரும் இந்த விவகாரம் குறித்து பாத்திமா பாபு விளக்கம் அளித்துள்ளார்.

என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. பல வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு செய்தி வெளியானது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து நான் ஒரு பிரபல வார இதழுக்கு விளக்கம் அளித்தேன். ஆனாலும், அது எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. சில காரணங்களால், செய்தி வாசிப்பாளர் பணியை நான் சில மாதங்கள் செய்யவில்லை. என்னை தினமும் பார்க்க முடியவில்லை என்பதால் யாரோ ஒருவர் இந்த வதந்தியை கிளப்பி விட்டிருப்பார் என நினைக்கிறேன்.

இதைக்கூறி, ஒரு கட்சியின் செயல் தலைவரின் குணநலன்களை விமர்சிப்பது தவறு. இப்போதும் நான் விளக்கம் அளித்துள்ளேன். ஆனால், அதை ஏற்க மாட்டோம் எனக் கூறினால் நான் எதுவும் செய்ய முடியாது” என அவர் தெரிவித்தார்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!