எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான ‘வண்ணமி’ எனும் இறால் இலங்கையில்..? – அதிர்ச்சி தகவல்…!


எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான ஈ.எம்.எஸ் எனும் பயங்கரமான பக்டீரியா அடங்கிய ‘வண்ணமி’ எனும் விசேடமான இறால் வகை ஒன்றினை, இலங்கைக்கு கொண்டு வருவதைத் தடுக்கக்கோரி, ஸ்ரீலங்கா மீன்வளர்ப்பு அபிவிருத்தி கூட்டணியின் தலைவர் கமல் நாணயக்கார சிலாபம் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

இந்தக் கோரிக்கையின் பிரதியை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் தனிமைப்படுத்தும் மையத்திற்கும் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த இறால் வகைகளை அமெரிக்காவின் ஹவாயில் இருந்து விமான மூலம் கொண்டு வருவதற்கு நேற்றைய தினம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர் வண்ணமி போன்ற இறால் வகைகளை இலங்கையில் வளர்க்கப்படவில்லை என்றாலும் இரண்டு வருட காலமாக இதனைப் பற்றிய கலந்துரையாடல்கள் பல நடைபெற்றன.

வண்ணமி இறால் வகைகளை இலங்கைக்கு கொண்டு வருவது விடயமாக இரண்டு கருத்துக்கள் நிலவியது.

இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இறுதியான முடிவை எடுப்பதற்கு கலந்துரையாடல் ஒன்று சிலாபத்தில் நடைபெற்றது.


இந்த இறால் வகைகளை நாட்டிற்கு கொண்டு வருவதென்றால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணைகள் நடைபெற வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வகையான இறால்களுக்கு ஈ.எம்.எஸ் பக்டீரியா தவிர, வேறு ஆறு வகை நோய்கள் உள்ளன எனவும் இந்த நோய்களைக் கட்டுப்படுத்த இன்னமும் மருந்து வகைகளை கண்டுபிடிக்கவில்லை என ஸ்ரீலங்கா மின் வளர்ப்பு அபிவிருத்தி கூட்டணியின் துணைச் செயலாளர் நிமல் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் வகைகள் எயிட்ஸ் வைரஸுக்கு சமமானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இறால் வகைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்புடைய நிறுவனங்களுக்கு தெரிவித்த போதிலும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா மின் வளர்ப்பு அபிவிருத்தி கூட்டணியின் பொருளாளர் மொகான் பெர்னாந்து தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவியபோது, இந்த இறால் வகைகளை இந்த நாட்டுக்கு கொண்டுவரும் முழுப்பொறுப்பும் அதிகார சபை ஏற்றுக்கொள்ளும் எனவும் இதனால் ஏதாவது கண்டறியாத நோய் வகைகள் பரவினால் அதன் பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் அதன் தலைவர் உபாலி மொஹொட்டி தெரிவித்தார்.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!