அடர்த்தியான நீண்ட தலைமுடி வளர்வதற்கு சமையல் சோடா சம்போ தயாரிப்பது எப்படி..?


சமையல் சோடாவை பல உணவு வகைகளிலும், நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளிலும் அதிகம் பயன்படுத்தி வருகின்றோம்.

இதனுடைய மற்றொரு சிறப்பு முடியின் ஆரோக்கியத்தையும் சுத்தத்தையும் பேணுவதுடன் முடியை அடர்த்தியாக வளரச் செய்கின்றது.

முடி வளர்ச்சிக்காக பயன்படுத்தும் சம்போக்களினால் முடி உதிர்வு அதிகமாவதுடன் பல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

நாம் தாயாரிக்கும் இயற்கை சம்போவில் அதிக நுரைகள் ஏற்படுவதுடன் உடலிற்கு எந்தவொரு பாதிப்புக்களையும் ஏற்படுத்துவதில்லை.

சம்போ தயாரிப்பது எப்படி?

ஒரு பகுதி சமையல் சோடாவுடன் மூன்று பகுதி நீரைச் சேர்த்து அதனை ஒரு போத்தலில் எடுத்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.


நமது கூந்தலின் நீளம், அடர்த்திக்கு ஏற்ப பொருட்களின் அளவை மாற்ற முடியும்.

மிக நீண்ட கூந்தலுக்கு 3 மேசைக்கரண்டி சமையல் சோடாவுடன் 9 மேசைக்கரண்டி நீரைச் சேர்த்து பயன்படுத்தலாம்.

இந்த சம்போவை நன்றாக தலை மற்றும் முடிகளிற்கு தேய்த்து சில நிமிடங்களின் பின்னர் குளித்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

வீட்டில் தயாரிக்கும் மற்றொரு சம்போ வகையும் கூந்தல் வளர்ச்சிக்கு கை கொடுக்கின்றது. ஒரு பகுதி ஆப்பிள் சிடர் விநாகிரியுடன் 4 பகுது நீரும் சிறு துளி எண்ணெய்யும் சேர்த்து சம்போவை தயாரிக்கவும்.

இந்த சம்போவை பயன்படுத்தும் போது பின்புறமாக பூசுவது சிறப்பானது. ஏனேனில் ஆப்பிள் சிடர் விநாகிரி கண்களை பாதிக்கும்.

இந்த சம்போக்கள் பயன்படுத்துவதனால் உடைந்த, பொலிவிழந்த கூந்தலை அகற்றி அடர்த்தியான ஆரோக்கியமான கூந்தலை வளரச் செய்கின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!