சல்மான் கான் இந்துவாக இருந்தால் தண்டனை கிடைத்திருக்காது – பாக். மந்திரி அதிரடி..!


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார்.

அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்த ஜோத்பூர் நீதிமன்றம், சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முஸ்லீம் என்பதாலே சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காவ்ஜா ஆசிப் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த காவ்ஜா ஆசிப் கூறுகையில், “ சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலே சல்மான் கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் சல்மான் கானுக்கு தண்டனை விதிக்கப்படுவதை பார்க்கும் போது, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை என்பதை காட்டுகிறது. சல்மான் கான் இந்து மதத்தைச்சேர்ந்தவராக இருந்து இருந்தால், இவ்வளவு கடுமையான தண்டனை அவருக்கு கிடைத்து இருக்காது. நீதிமன்றம் கருணை அளித்திருக்க கூடும்” என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!