யாழில் முதலமைச்சரை சந்தித்த பிரபல நடிகர் கருணாஸ்..!


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நகைச்சுவை நடிகரும் தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார்.

இன்று(06.04.2018) காலை 9.30 மணியளவில் முதலமைச்சரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றள்ளது.

இதன்போது, தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்சருடான சந்திப்பு நிறைவடைந்ததும் கருணாஸ் யாழ்ப்பாண செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!