இந்த ராசிக்காரருக்கு வருகிற புத்தாண்டில் பல அதிர்ஷ்டம் கொட்டுமாம்….!


புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடத்தில் கடக ராசிக்கு சிறப்பான அம்சம் என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பெரும் பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி நிலை கொண்டிருப்பது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை கடக ராசிக்காரர்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும் நான்காமிடத்தில் இருக்கிறார் ஆகையால் குருவால் இனிமேல் கடகத்திற்கு பல நன்மைகள் இருக்கும்.

கடகராசியைச் சேர்ந்த தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் உங்களின் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும்.

இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விடயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.திருமணமாவதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்குமாம்.


குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.மேலும் பணபிரச்சனை நீங்கி நல்வழி பிறக்கும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு.

பெண்களுக்கு கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. . கடக ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத புது வருடம் இது.-Source: adityaguruji

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!