பிரபல சாமியார்கள் 5 பேருக்கு மந்திரி அந்தஸ்து அளித்த ம.பி அரசு..!


மத்திய பிரதேசத்தில் 5 சாமியார்களுக்கு மாநில இணை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டது இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான பணிக்காக… ம.பி.,யில் உள்ள கம்ப்யூட்டர் பாபா, நர்மதானந்த் மகாராஜ், ஹரிஹரநாத் மகாராஜ், பயு மகாராஜ், மற்றும் பண்டிட் யோகேந்திர மகந்த் ஆகியோருக்கு மாநில இணையமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டது.

நர்மதை நதி பாதுகாப்பு குழுவில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. அந்த குழுவில் 5 பேரும் கடந்த மாதம் தான் நியமனம் செய்யப்பட்டனர். இது அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கம்ப்யூட்டர் பாபா கூறுகையில், இணையமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டதில் என்ன தவறு உள்ளது. எங்களது பணிக்கு பரிசு கிடைத்துள்ளதாக கூறினார். தேர்தல் வெற்றிக்காக இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்களை பயன்படுத்த பா.ஜ., முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். மாநில காங்., தலைவர் பங்கஜ் சதுர்வேதி கூறுகையில், தனது பாவத்தை போக்கி கொள்ள முதல்வர் மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

நர்மதா நதியை பாதுகாக்க அவர் தவறிவிட்டதாக கூறினார். மறுப்பு ஆனால், இதனை மறுத்துள்ள மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரஜ்னிஸ் அகர்வால், மாநில அரசு, சட்டப்படி தான் செயல்பட்டு வருகிறது. நதி பாதுகாப்பு பணியை எளிமையாக்கியதற்காக தான் சாமியார்களுக்கு மாநில இணையமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!