இலங்கையில் சுவிஸ் பெண் இப்படியொரு செயலை செய்தாரா..?


இலங்கையில் வாழும் சுவிட்சர்லாந்து பெண் ஒருவர் நிலாவெளி கடற்ரையை சுத்தம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

71 வயதான மாக்ரட் என்ற சுவிஸ் நாட்டு பெண்ணே இந்த சேவையை பல வருடங்களாக செய்து வருகின்றார்.

1982ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவர் இந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். அவர் மாத்திரமின்றி அவரது குடும்பத்தினரும் இலங்கையில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

மாக்ரட் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையை அதிகம் நேசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் நிலாவெளி கடலுக்கு சுற்றுலா பயணம் செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு செல்லும் மாக்ரட் கடற்கரையில் காணப்படும் குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தப்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். அவருடன் இணைந்து அவரது குடும்பத்தினரும் இந்த சேவையை செய்து வருகின்றனர்.

மாக்ரட் அந்த பகுதியில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி சென்று அந்த பிரதேச பிள்ளைகளின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்து வருகின்றார்.

“மக்களை மாற்ற முடியாது. எனினும் நாம் மாறலாம்” என கூறி மாக்ரட் கடற்கரை சுத்தப்படுத்துகின்றார்.

இலங்கை உலகின் அழகான நாடு. குப்பைகளை கொட்டி ஏன் இவ்வாறு அசுத்தப்படுத்துகின்றீர்கள் என மாக்ரட் கேட்டுள்ளார். இதன்போது அவரை சிலர் புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். எனினும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் அவரிடம் சம்மதம் பெற்று புகைப்படம் எடுத்துள்ளனர். தனக்கு பிரபலமடைவதில் விருப்பம் இல்லை என மாக்ரட் அங்கிருந்தவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.-Source: tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!