இந்த மூலிகைகளை பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் முகத்தை வெண்மையாக்கலாம்!


அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.

பண்டைய காலம் தொட்டே இந்த அழகுபடுத்தல் வேலைகள் தொடர்ந்து கொண்டிருந்தன என்பதே உண்மை.

இன்றைய மருத்துவ வளர்ச்சியால் முகத்தை அழகாக்க பல்வேறு வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இக்காலத்து மக்கள் அனைவரும் மருத்துவ முறைகளின் பின்னால் செல்கின்றனர்.

ஆனால், மருத்துவம் வளர்ச்சி கண்டிராத அந்தக் காலத்திலும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் தங்களை இயற்கை மூலிகைகளைக் கொண்டு அழகுபடுத்திக் கொண்டார்கள்.

மூலிகைகளைப் பயன்படுத்தி அழகுபடுத்தும் முறைகள் இன்றும் கூட பின்பற்றப்படுகின்றது. அவை முகத்தை பளபளப்பாக்குவதோடு மட்டுமின்றி வெண்மையாகவும் மாற்றுகிறது.


அது என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள கட்டாயம் இதை படியுங்கள்!

உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம், கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம், கோரை கிழங்கு பொடி 100 கிராம், உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம் போன்றவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும்.

அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். சோப்பு போடக்கூடாது.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளப்பதோடு முகமும் மென்மையாகும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!