நடு ரோட்டில் முகமது ஷமியை நிற்க வைத்து அடிக்க வேண்டும் – மனைவி ஆவேசம்..!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கத்தா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரச்சனைக்கு இடையே முகமது ‌ஷமி, மனைவிக்கு அனுப்பிய சமாதான தூது பயனில்லாமல் முடிந்தது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தாவில் மாஜிஸ்திரேட் முன்னதாக ஆஜராகி ஹசின் ஜஹன் தன்னுடைய வாக்குமூலத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹசின் ஜஹன், முகமது சஷி மீதான தாக்குதலை குறைக்கவில்லை.

முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹன் கூறியது தொடர்பாக பிசிசிஐ ஊழல் எதிர்ப்பு பிரிவும் விசாரிக்கிறது. மோசமான செயலுக்காக துபாய் ஓட்டலில் முகமது ஷமி மற்றும் பாகிஸ்தானி பெண் அலிஸ்பாவும் சந்தித்தனர் எனவும் ஹசின் ஜஹன் கூறியிருந்தார். ஆனால் முகமது ஷமியும், அலிஸ்பாவும் அதனை மறுத்தனர், நாங்கள் நண்பர்கள் மட்டுமே என விளக்கம் கொடுத்தார்கள். இருப்பினும் ஹசின் ஜஹன், முகமது ஷமியை கைது செய்ய மீடியாக்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

அலிஸ்பா முகமது ஷமியின் ரசிகர் கிடையாது, முகமது ஷமியை நடு ரோட்டில் நிற்கவைத்து அடிக்க வேண்டும் என கூறிஉள்ளார்.

ஹசின் ஜஹன் பேசுகையில், “அலிஸ்பா முகமது ஷமியின் ரசிகர் கிடையாது. அலிஸ்பா, முகமது ஷமியின் பெண் தோழியாக இருக்கலாம். அவர் விபசாரம் செய்பவராகவும் இருக்கமுடியும். வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண், ஒரு ஆணை ரகசியமாக சந்தித்து பேசிஉள்ளார், அறையை பகிர்ந்து உள்ளார். இது மோசமான உறவுதான். என்னுடைய திருமண வாழ்க்கையை அழிக்க வந்தவள். என்னுடைய கணவரையும் தவறாக வழிநடத்தி உள்ளார். என்னுடைய கணவரும் குறைந்தவர் கிடையாது. உங்களிடம் அதிக முறை கூறிவிட்டேன் பாகிஸ்தானி பெண்ணுக்கும் என்னுடைய கணவருக்கும் தகாத உறவு உள்ளது என்று. அவர்கள் மோசமான உறவுக்காகதான் துபாயில் தங்கினார்கள் என்பதே உண்மையாகும்,” என்றார்.

முகமது ஷமியை அடிக்க எனக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும். முகமது ஷமியை நடு ரோட்டில் நிற்க வைத்து அடிக்க வேண்டும். இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை முகமது ஷமி அழிக்கப்போகிறார்? என கேள்வியை எழுப்பி உள்ளார் ஹசின் ஜஹன்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!