அண்டார்டிகாவில் உள்ள ‘ராட்டன்’ ராட்சத பனிப்பாறையும் உருகுகிறது – அதிர்ச்சியில் மக்கள்..!


அண்டார்டிகாவில் பல பனிப்பாறைகள் மிதக்கின்றன. அவற்றில் பிரான்ஸ் நாட்டின் அளவுக்கு மிகப்பெரிய ராட்சத பனிப்பாறை உள்ளது.

அதற்கு ‘ராட்டன்’ பனிப்பாறை என பெயரிட்டுள்ளனர். பொதுவாக பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகி வருகின்றன.

இதுகுறித்து 2002 முதல் 2016-ம் ஆண்டு வரை ‘நாசா’ மையம் ஆய்வு நடத்தியது. பனிக்கட்டிகள் உருகுவதால் அண்டார்டிகா ஆண்டுக்கு 125 ஜிகா டன் ஐஸ் கட்டிகளை இழக்கிறது. இதன்மூலம் உலக அளவில் ஆண்டுக்கு 0.35 மில்லி மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயருகிறது என கண்டுபிடித்தது.

இந்தநிலையில் அண்டார்டிகாவில் உள்ள ‘ராட்டன்’ ராட்சத பனிப்பாறையும் உருக தொடங்கிவிட்டது. பருவநிலை மாற்றத்தால் இப்பனிப்பாறை உருகுவதால் அது மெல்ல நகர்ந்து பல நூறு மைல் தூரத்தை கடந்து விட்டது.

இது முழுவதுமாக கரைந்துவிட்டால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகள், தீவுக்கூட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!