விமான ஓடுதளத்தில் மழையாக பொழிந்த வைர குவியல்கள்.. பின்ணனியில் அதிர்ச்சி..!


ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்டவை குவியல் குவியலாக விமானத்தில் இருந்து மழை போன்று பொழிந்துள்ளது.

இது ஓடுதளம் முழுக்க சிதறியபடி விழுந்துள்ளது. குறித்த தகவல் விமானிக்கு தெரியப்படுத்தப்பட்டதும் விமானத்தை அருகாமையில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது .குறித்த சரக்கு விமானமானது சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் கட்டிகளை எடுத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளதை அடுத்து குறித்த விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இது கொள்ளையர்களின் சதியா அல்லது விமானம் பழுதானது தெரியாமல் விலைமதிப்பற்ற சரக்குகளை ஏற்ற அனுமதித்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானத்தை சேவைக்கு அனுமதித்த தொழில்நுட்ப அதிகாரிகளை முதற்கட்டமாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் அனுப்பப்பட்ட சரக்குகள் அனைத்தும் சிகோட்டா மின்னிங் மற்றும் ஜியோலாஜிகல் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். ரஷ்யாவிலேயே அதிக வைர உற்பத்திக்கு பெயர்போன இடமாகும்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!