புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கிய மைக்ரோசாப்ட்..!


மொழிப்பெயர்க்க உதவும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆராய்ச்சியில் மிகப்பெரிய மைல் கல்லை அடைந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீன மொழி செய்திகளை துல்லியமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் புதிய கருவியை கண்டறிந்துள்ளனர். இந்த கருவி மனிதர்களை போன்று தெளிவான மொழிபெயர்ப்பை தரும். இந்த ஆராய்ச்சிக்கு பலர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மொழிபெயர்ப்பு, இந்த புதிய கருவி தரும் மொழிபெயர்ப்பை ஒத்து இருந்தது. மேலும் கருவி இரு பக்கமாக செயல்படும் திறன் கொண்டது. அதாவது சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து சீன மொழிக்கும் மாற்றும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர் அருள் மேனசிஸ், ‘மொழிபெயர்ப்பு கருவியை உருவாக்குவதில் எங்கள் ஆராய்ச்சிக் குழு சாதனை புரிந்துள்ளது. நாங்கள் துல்லியமாக மொழிபெயர்க்கும் மனிதர்களை போன்ற கருவியை உருவாக்க எண்ணினோம். அதே போல் கருவியை உருவாக்கி விட்டோம். இந்த கண்டுபிடிப்பு செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றமாகும். இது மிக பயனுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!