தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – பரபர நிமிடங்கள்..!


சீனாவின் நன்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், அந்த குடியிருப்பின் 8-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் எவ்வளவு சொல்லியும், அந்த பெண் கீழே இறங்கவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டிற்கு மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர், அந்த வீட்டு ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழ் தளத்தில் தற்கொலை மிரட்டல்விடுத்த பெண்ணின் வீட்டிற்கு இறங்கினார்.

கயிறு மூலம் கீழே இறங்கிய வீரர், ஜன்னலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை உதைத்து வீட்டிற்குள் தள்ளினார். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சீனாவின் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பேஸ்புக்கில் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!