கர்ப்ப காலத்தில் வரும் அரிப்பிற்கு உதவும் வீட்டு வைத்திய முறைகள்..!


கர்ப்பகாலத்தில் தாயின் வயிறு பெருக்க பெருக்க வயிற்றில் ஏற்படும் அரிப்பும் அதிகரிக்கும். இதனால் அடிக்கடி வயிற்றை சொரிய வேண்டி ஏற்படும். இவ்வாறு செய்வதனால் பார்போரைக் கூட அது முகஞ்சுளிக்க வைக்கும்.

ஆனால் கருவுற்றுள்ள தாய்க்கே அரிப்பு மூலம் ஏற்படும் அசௌகரியமும் அதை சொரிவதால் ஏற்படும் சுகமும் தெரியும்.

இந்த அரிப்பு ஏற்படுவது ஏன்?
கர்ப்ப காலத்தில், தாயின் வயிற்றில் உள்ள குழந்தை வளர வளர, அதற்கு இடம் கொடுப்பதற்கு ஏற்றாற் போல் தாயின் வயிரும் கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கும். அதன் போது தசைகள் விரிவடையும். தசைகள் விரிவடைவதனாலேயே இந்த அரிப்பு ஏற்படுகின்றது.


எனினும், இந்த அரிப்பிற்கு நாம் செய்யக் கூடிய வீட்டு வைத்தியங்கள் என்ன?

01. ஓட்ஸ் குளியல்
ஒரு கோப்பை ஓட்ஸை, கொதித்தாறிய நீரில் இட்டுஅதந்தநீரில்குளித்துவரவயி;றில்ஏற்படும்அரிப்புநீங்கும்.

02. பேக்கிங்சோடாகுளியல்
பேக்கிங்சோடாவைதண்ணீரில்இட்டுக்கலக்கிக்கொள்ளவும். பின்னர் அந்த தண்ணீரில் அதிக நேரம் இருப்பதன் மூலம் அரிப்பை குறைத்துக் கொள்ளலாம்.


03. கற்றாழைச்சாறு
ஒவ்வொரு முறையும் குளியலின் பின்னர், அரிப்பு ஏற்படும் வயிற்றுப் பகுதியில் கற்றழைச் சாற்றை பூசுவதன் மூலம் அரிப்பை கட்டுப்படுத்தலாம்.

04. குளிர்ந்த நீர்
அரிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் குளிர்ந்த நீரில் துவாயை நனைத்து அதை அரிப்பு உள்ள பகுதியில் வைப்பதன் மூலம் அரிப்பை கட்டுப்படுத்தலாம்.


05. தேங்காய்எண்ணெய்
கர்ப்பகாலம் முழுவதும் வயிற்றில் எண்ணெய் தேய்த்து வருவதன் மூலம் அரிப் புநீங்கும். அத்துடன் இது தாய்க்கும் சேய்க்கும் உள்ள பிணைப்பை அதிகரிக்கும். – © tamilvoicenews.com | All Rights
Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!