உடலில் உள்ள கெட்ட சளியை வியர்வை மூலம் எப்படி வெளியேற்றலாம்..?


சளிப் பிரச்சினை என்பது வாய் வார்த்தைக்கு சாதாரணமான ஒன்றாகத் தெரிந்தாலும் உண்மையில் அது எல்லை மீறும் பட்சத்தில் பாரிய நோயாகக் கூட மாறி விடலாம். சிலர் சளிப் பிரச்சினையால் வைத்தியசாலையிலும் இருக்க நேரிடும்.

இன்னும் சிலருக்கு மருந்து குடிப்பதென்பது மிகப் பெரிய தர்ம சோதனையாகவே தோன்றும். தூசியோ, அலர்ஜியோ ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.

இது போன்ற தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் ஹிஸ்டமைன் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்கின்றன.


இந்த ஹிஸ்டமைன் உடனே தும்மல், அரிப்பு, மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்றதொரு உணர்வைத் தூண்டி விடுகிறது. இவ்வாறு தூண்டப்பட்டவுடன் சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட ஆரம்பிக்கின்றன.

ஆனால் இந்த சளித் தொல்லையை வியர்வை மூலம் வெளியேற்றும் முறை பற்றி நீங்கள் கேள்வியுற்றதுண்டா?

அது எவ்வாறு சாத்தியம் என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்!


முதலில் மூன்று எலுமிச்சையை எடுத்துக் கொண்டு பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு, ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை தண்ணீர் எடுத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இரண்டு கோப்பை நீர் ஒரு கோப்பை அளவிற்கு குறையும் வரை கொதிக்க வைத்து, வெட்டி வைத்துள்ள எலுமிச்சையை அதில் நன்றாக பிழிந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை, இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு மிதமான சூட்டுடன் குடித்து விட்டு தூங்கினால், உடம்பில் உள்ள சளி அனைத்தும் வியர்வையாக வெளியேறி விடும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!