மகாத்மா காந்தியின் அரிய புகைப்படத்திற்கு கிடைத்த ஏலத்தொகை எவ்வளவு..?


இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இங்கிலாந்து அரசுடன் வட்ட மேஜை மாநாடு மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2-வது வட்ட மேஜை மாநாடு லண்டனில் 1930 முதல் 1932-ம் ஆண்டுவரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் காந்தி மற்றும் மதன் மோகன் மாலவியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் காந்தி இணைந்து இருக்கும் போட்டோ எடுக்கப்பட்டது.

இந்த போட்டோவில் பவுன்டன் பேனாவினால் எம்.கே. காந்தி என அவர் கையெழுத்திட்டுள்ளார். இத்தகைய அரிய போட்டோ அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆர்.ஆர். மையத்தில் ஏலம் விடப்பட்டது.

இப்போட்டோ ரூ.28 லட்சத்துக்கு (41,806 டாலர்) ஏலம் போனது. இதை ஏலத்தில் எடுத்தவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!