தலையில் ஏற்படும் அரிப்பிற்கு உடனடியாக தீர்வு சொல்லும் கொய்யா இலை.!


பழங்களை விரும்பாதவர்கள் யாருமே இவ்வுலகில் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் கொய்யாப் பழத்தை விரும்புபவர்களும் பலர் உள்ளனர். கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்களை எம்மவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும், இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

கொய்யா பழத்தைப் போன்று கொய்யா இலையிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. முன்பெல்லாம் ஏதேனும் உடல் உபாதை வந்து விட்டால் உடனே இந்த மருத்துவ குணம் பொதிந்த பழங்கள் மற்றும் அதன் இலைகளை வைத்து தீர்வு கண்டார்கள்.

ஆனால் இப்போதோ உடனடியாக மருத்துவரையே நாடுகின்றனர். வீட்டிலேயே ஒரு மருத்துவரை வைத்துக்கொண்டு ஏன் வெளியில் உள்ள மருத்துவரை நாட வேண்டும் என்பது தான் எனது கேள்வி. ஆம், கொய்யா இலையை வைத்தே பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இனி, கொய்யா இலை எதற்கெல்லாம் உதவுகின்றது எனப் பார்ப்போமா?


01. தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை மண்டைஓட்டில் படும்படி தடவி பின்னர் கழுவ வேண்டும்.

02. முடி வெடிப்புகளை தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

03. செரிமான பிரச்சனைக்கு கொய்யா இலை தேநீரை குடித்தால், அந்த பிரச்சினை தீரும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

04. ஆண்கள் கொய்யா இலை தேநீரை குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.

05. குடிபோதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே சரியாகி விடும்.

06. கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடிபலம் பெறும்.


07. கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடு தண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும். நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலை சாறில் வயிற்று போக்குக்கு காரணமாக இருக்கக் கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

08. இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷhயம் முற்றுப் புள்ளி வைக்கின்றது.

09. கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் எடை குறையும்.

10. கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று வந்தால் அல்லது கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் வாயில் ஏற்படும் பல்வலி, ஈறு பிரச்சனைகள், வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் ஆகியன சரியாகும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!