கால்பந்து போட்டிக்கு வந்த கிரிக்கெட் வீரர் தெண்டுல்கருக்கு கண்ணசைவு நாயகியால் கிடைத்த பரிசு…!


கொச்சியில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் போது சச்சின் டெண்டுல்கரை கண்சிமிட்டல் நடிகையான பிரியா வாரியர் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

ஒரு கண்சிமிட்டல் பாடல் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் பிரியாவாரியர் பற்றிய தகவல்களாகவே வந்து கொண்டு இருக்கின்றன.

பிரியா வாரியர் நடித்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சையால், சில மாநிலங்களில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு தடை விதித்துள்ளது.


இதனால் பிரியாவாரியர் பற்றிய பரபரப்பான பேச்சு மேலும் அதிகமாகி விட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கொச்சியில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதியது.

இந்த போட்டியில் கேரள அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியரும், அவருடன் ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடிக்கும் ரோ‌ஷனும் சென்று இருந்தனர். இந்த போட்டியை காண கிரிக்கெட் சாதனை வீரர் தெண்டுல்கரும் வந்து இருந்தார்.

அவரை விளையாட்டு மைதானத்தில் பிரியா வாரியர் சந்தித்தார். அப்போது கேரள அணியின் லோகோ அடங்கிய பனியனை தெண்டுல்கருக்கு வழங்கி மகிழ்ச்சி பொங்க புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரோ‌ஷனும் சென்றார். இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!