முகத்தில் அசிங்கமாக வரும் கரும்புள்ளிகள், பருக்களை தடுக்கும் தயிர் பேஸ் மாஸ்க்..!


ஆரோக்கியத்திற்கு பிரசித்தி பெற்ற தயிர், முகத்தை அழகாக்குவதற்கும் பெரிதும் உதவி புரிகின்றது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். சிலருக்கு தயிரின் சுவை பிடிக்காமல் தயிர் சாப்பிடுவதையே தவிர்த்து விடுவார்கள். அவ்வாறு தயிர் சாப்பிட விருப்பம் அற்றவர்கள் அதன் மூலம் எவ்வாறு பயன் பெறலாம் என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

01. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வருவதை தடுக்கும்
சருமத்தின் மேற்பகுதியில் உள்ள எபிடர்மிஸில் கல்சியம் சத்துக்களே நிறைய இருக்கும். ஆகவே அதன் மீது கல்சியம் நிறைந்த தயிரை தடவுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். அதே நேரத்தில் சரும வறட்சியிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.


02. சருமத்தை ஈரப்பசையுடன் வைத்திருக்க உதவும்
தயிரில் உள்ள ரிபோஃப்லாவின் எனப்படும் விட்டமின் பி2, சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்திருக்கும். அத்தோடு, நம் சருமத்தின் அடிப்படையான செல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

03. மிகச்சிறந்த மொய்ஸ்சரைசராக செயற்படும்
சருமத்திற்கான அழகுசாதன பொருட்களில் இடம் பெறும் முக்கியப் பொருள் லாக்டிக் அமிலம். இது மிகச்சிறந்த மொய்ஸ்சரைசராக செயற்படும். அதோடு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும்.


04. சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்யும்
தயிரை முகத்தில் பூசுவதன் மூலம், அதிலுள்ள லாக்;டிக் அமிலம் சருமத்தில் உள்ள என்சைம்களை புத்துணர்சி பெறச் செய்யும். இதனால் பிரகாசமான சருமத்தை பெற முடியும்.

05. இறந்த செல்களை அகற்றுகின்றது
தயிரில் உள்ள ஹைட்ராக்ஸில் அமிலம் நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்த உதவுவதுடன் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

06. பக்டீரியாக்களை அழித்திடும்
தயிரை பேஸ் மாஸ்க்காக தினமும் பூசி வந்தால், அது முகத்தில் சேரும் பக்டீரியாக்களை அழித்திடும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!