மாதவிடாய் காலத்தில் கட்டாயம் ஏன் தியானம் செய்ய வேண்டும்..?


மாதவிடாய் என்பது எல்லா பெண்களுக்கும் உடலளவில் அல்லது உளரீதியில் பெரும் சுமையாக அமையும் விடயம் ஒன்றாகும். கால்களில் வலி, வயிற்று வலி மற்றும் உளரீதியான மாற்றங்கள் என்பன இந்த நாட்களில் ஏற்படும். உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கூட சமாளித்து விடலாம் எனலாம். ஆனால் உளரீதியான மாறறங்களை சமாளிப்பது கடினம் என்று தான் கூற வேண்டும்.

இந்த நாட்களில் பெண்களின் உடலில் வெப்பநிலை அதிகரிப்பதோடு ஹோர்மோன்களிலும் மாற்றங்கள் ஏற்படும். இதுவே வேறுபட்ட அல்லது மாறுபட்ட மனநிலைகள் ஏற்படக் காரணமாய் அமையும்.


முன்பெல்லாம் பெண் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதென்றால், மாதவிடாய் முடியும் வரை அவளை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் உண்மையில், மாதவிடாய்க் காலத்தில் தான் ஒதுக்கி வைக்கப்பட்டதாகப் பெண் ஒருவர் நினைக்க வேண்டியதில்லை. இது போன்ற எண்ணம் கூட அதிகளவான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நாட்களில் மூச்சுப்பயிற்சி செய்வது உத்தமம். எனினும், யோகாசனங்கள் செய்யக் கூடாது. அத்துடன், தியானம் செய்வதும் பெண்களுக்கு சிறந்த உளரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும்.
தியானம் செய்யும்போது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான வலிகளை மனம் கவனிக்கும். ஹோர்மோன் மாற்றங்களால், உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகளை புரிந்துகொள்ள வழிவகுக்கும். மனம் ஒருநிலைப்படுவதால் கோபம் போன்ற எதிர்மறையான விளைவுகள் கட்டுப்படுத்தப்படும்.

ஆகவே மாதவிடாய் காலத்தை பதற்றம் இன்றி கழிக்க, இந்த தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி என்பன மிகவும் அவசியம். எனவே தியானம் செய்யுங்கள், பலன் பெறுங்கள்!
– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!