ஆண் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் இளம் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு…!


கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ளது ஹனுமந்தபுரா கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் நாகஸ்ரீ (25). இவருக்கு நவ்யாஸ்ரீ (5), திவ்யஸ்ரீ (3) மற்றும் இரண்டரை மாத பெண் குழந்தை என மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று காலை நாகஸ்ரீ, அதே பகுதியிலுள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு தனது முன்று பெண் குழந்தைகளையும் தூக்கி கிணற்றில் வீசி கொன்றார். அதைத்தொடர்ந்து, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் நாகஸ்ரீ மற்றும் மூன்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாகஸ்ரீயின் கணவர் வீட்டினர் முதலில் இருந்தே ஆண் குழந்தைதான் வேண்டும் என அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். எனவே ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த நாகஸ்ரீக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறக்கவும் விரக்தியில் இருந்தார் என தெரிய வந்துள்ளது என்றனர்.

ஆண் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் மூன்று மகள்களை கொன்ற தாய், தானும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!