திருமணத்தில் மாப்பிள்ளையிடம் கோரிக்கை வைத்த பாசமிகு அப்பா.!

என் மகளை நேசிப்பதை நிறுத்தினால், அவளை புண்படுத்தாதே, அவளை என்னிடம் திரும்ப கொடுத்துவிடு. அவளை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சி கேட்கிறார்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே… அப்பாக்களுக்கு மகள்கள் எப்போதுமே தேவதைகள்தான். மகள்களுக்கு ஆண் தேவதை, தன்னுடைய அப்பா மட்டுமே.

சாதாரணமாக ஒரு வீட்டில் அம்மாவுக்கு மகன்களும், அப்பாவுக்கு மகள்களும் செல்லப்பிள்ளைகளாக இருப்பது வழக்கம் தான். இருந்தாலும், உலகில் மற்ற உறவுகளைவிட அப்பா – மகள் உறவு அதிகம் கொண்டாடப்படுகிறது.

அப்படிப்பட்ட மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இன்னொருவர் கையில் கொடுப்பது அப்பாக்களுக்கு மிகுந்த வேதனைதான்.

இந்தநிலையில், மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மருமகனின் கையை பிடித்து கொண்டு தந்தை கதறி அழும் வீடியோ மனதை உருக்குவதாக இருக்கிறது.

திருமணம் முடிந்தவுடன் மருமகனின் கையை பிடித்து கொண்டு அப்பெண்ணின் தந்தை அழுது கொண்டே, என்றாவது ஒரு நாள் உன் மனதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், என் மகளை நேசிப்பதை நிறுத்தினால், அவளை புண்படுத்தாதே, அவளை என்னிடம் திரும்ப கொடுத்துவிடு. அவளை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சி கேட்கிறார்.

”அதுபோல் நடக்காது” என்று மருமகன் மாமனாருக்கு ஆறுதல் கூறுகிறார். என் அருமை மகள் இப்போது உன்னுடையவள் என்று மாமனார் தனது மகளின் கையை மருமகன் கையில் கொடுத்து உணர்ச்சி வசப்படுகிறார்.

இந்த நேரத்தில் மருமகன் மற்றும் மகள் என இருவரும் உணர்ச்சிவசப்பட, மாமனார் மற்றும் மருமகன் ஒருவரையொருவர் இறுக கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்படுகின்றனர். திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் மணப்பெண்ணின் அழுகையை பார்த்து அவர்களும் நெகிழ்ச்சி அடைந்து அழுகின்றனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ‘உனக்கு வேண்டாம் என்றால் என் மகளை திருப்பி கொடு’ என்று தந்தை கூறியதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டதாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இப்படியொரு தந்தை கிடைத்தது பாக்கியம் என்று ஒருவரும், மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒவ்வொரு தந்தையும் தன் மருமகனிடம் இதை கூற வேண்டும் என சமூகதளவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 18 -ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் டிக்டாக் பயனரான கைலி யோ தனது தலைப்பில் “என் அப்பா அழுவதை நான் முதன்முறையாக பார்த்தேன்” என்று எழுதி உள்ளார்.

ஏசியன் ஒன் செய்திக்கு பேட்டி அளித்த கைலி, சிங்கப்பூரில் 2021 இல் கோவிட்-19 -ன் போது திருமணம் நடந்ததாக அவர் பகிர்ந்து கொண்டார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!